Chennai | 18 சவரன் தங்க நகை கவரிங் நகையாக மாறிய அதிசயம்.. குறிவைத்து தூக்கிய போலீசார்
சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில், கவரிங் நகைகளை மாற்றி வைத்து, 18 சவரன் எடைகொண்ட 2 தங்க சங்கிலியை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கடையின் மேலாளர் மாதவராமு, அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நகை வாங்க வந்த நபர் ஒருவர் கவரிங் நகையை மாற்றி வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நகை திருட்டில் ஈடுபட்ட திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது கூட்டாளி கெளதம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.