Chengalpattu | Police | ஓரமாக போகச் சொன்ன போலீசார் மீதே மோத வந்த கார்... திடீர் பரபரப்பு
ஓரமாக போகச் சொன்ன போலீசார் மீதே மோத வந்த கார்... திடீர் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஓரமாக போகச் சொன்ன போலீசார் மீது ஒருவர் காரை மோத வைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலைநகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை ஓரமாக செல்லுமாறு காவலர் செந்தில் சைகை காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, காவலர் மீதே காரை ஏற்றுவது போல முன்னேறிச் சென்றார்.
உடனடியாகச் காவல்துறையினர் காரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். காரிலிருந்த ஓட்டுநர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.