தர்பூசணிக்கு ரசாயன ஊசி? - சீசன் இருந்தும் அழுகும் தர்பூசணிகள்

Update: 2025-04-11 09:22 GMT

தர்பூசணி பழங்களை, ரசாயன ஊசிகள் மூலம் சுவையானதாக மாற்றுவதாக சமீபத்தில் வந்த செய்திகளைத் தொடர்ந்து, தர்பூசணி கொள்முதல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கிளாதரி, மீனாட்சிபுரம், திருமாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணிகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால், 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்த தர்பூசணிகள் அறுவடை செய்ய முடியாமல் அழுகி வருவதாக விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். சீசன் நிறைந்த கோடை காலத்தில், யாரோ சிலர் செய்த தவறினால், ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக கூறும் விவசாயிகள், அரசு இதற்கு உரிய நிவாரணைம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்