38 ஆண்டு பணியாற்றிய காவலருக்கு உற்சாக வழியனுப்புதல்

Update: 2025-07-01 02:02 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம், ஓய்வுபெறும் காவல்துறை அதிகாரியின் வழியனுப்பு விழாவால் செண்டை மேளம் முழங்க திருவிழா போல அமர்க்களமாக காட்சியளித்தது. நாகர்கோவிலைச் சேர்ந்த சபாபதி, தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி வகித்து 38 ஆண்டுகள் பணி மேற்கொண்டு வந்த நிலையில், ஓய்வு பெற்ற அவரை கேரளா பாரம்பரிய சிங்காரி மேளம் எனும் மேளம் முழங்க மலர் கிரீடம், மலர் மாலை என அமர்க்களப்படுத்தி அவரை காவலர்கள் அரசு வாகனத்தில் வீடு வரை சென்று வழியனுப்பி வைத்தனர். முன்னதாக அவர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டதோடு, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்