சென்னையில் நாளை சில மாற்றங்கள் - வெளியே செல்லும் மக்கள் கவனத்திற்கு
சுதந்திர தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல, இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.