3-வது மாடியில் இருந்து பெயர்ந்து விழுந்த செல்போன் டவர்

Update: 2025-05-29 06:39 GMT

Chennai Cell Phone tower fall down | 3-வது மாடியில் இருந்து பெயர்ந்து விழுந்த செல்போன் டவர்

சென்னை புரசைவாக்கத்தில் மழையினால் மூன்றாவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் பெயர்ந்து, அருகிலுள்ள மாடி மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

கங்காதீஸ்வரர் அவென்யூ பகுதியில், சுரேஷ்குமார் சுரானா என்பவரின் வீட்டில் இருந்த பிஎஸ்என்எல் செல்போன் டவர் இடிந்து, அருகிலுள்ள மற்றொரு வீட்டின் மாடி மீது விழுந்தது. இதில் மாடிச் சுவரும் படிக்கட்டுகளும் உடைந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த போலீசாரும், பிஎஸ்என்எல் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சேதமடைந்த டவரை அகற்றி, வீடு முழுமையாக சரி செய்து தருவதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்