"சண்டை நிறுத்தம் - டிரம்ப் கிரெடிட் எடுப்பது ஏன்?" | காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரெடிட் எடுப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,சண்டை நிறுத்தம் அறிவித்ததில் வர்த்தகமே முக்கிய ஆயுதமாக இருந்தது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பிரதமர் மோடியும்,மத்திய வெளியுறவு அமைச்சரும் மவுனமாக இருப்பது ஏன் எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.