சிறுத்தைகள் கிராஸான பீதி அடங்குவதற்குள்.. வீட்டு சந்துக்குள் புகுந்த கரடி
உதகை குளிச்சோலை பகுதியில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..நீலகிரி மாவட்டம் உதகை அருகே குளிச்சோலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 சிறுத்தைகள் உலா வந்த நிலையில் தற்போது அதே பகுதியில் கரடி உலா வந்துள்ளது. வீட்டின் வெளியே பாத்திரங்கள் வைக்கப்படிருந்த இடத்தில் மெதுவாக வந்த கரடி தோட்டத்திற்குள் சர்வசாதாரணமாக நடந்து சென்றது .