கிணற்றில் விழுந்த பூனை..காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்..ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோட்டில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற சென்றவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியில் பூனை தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் கணேசன் என்பவர் பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். கணேசன் மது போதையில் இருந்ததால் மேலே நீந்தி வர முடியாமல் மூச்சு திணறி இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார் தீயணைப்புப் படையினர் உதவியுடன், அரை மணி நேரம் போரடி உடலை மீட்டனர்.