அறநிலைத்துறை அதிகாரிகள் மீது சாதிய வன்கொடுமை வழக்கு
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா அளித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி தேனி மாவட்டம் வீரபாண்டி கோவில் திருவிழாவின்போது, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாவிடம் சாதிய பாகுபாடு காட்டியதாக காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், இந்து சமய அறநிலைத்துறை உதவி இயக்குனர் ஜெயசுதா, வீரபாண்டி கோயில் செயல் அலுவலர் நாராயிணி, வீரபாண்டி கோவில் கணக்கர் பழனி மற்றும் பாலு, மேளதாரர் வீரமணி ஆகிய ஆறு பேர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.