திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடைகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரணையின் போது, மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பு தெரிவித்தது. இதனைக் கேட்ட நிதிபதிகள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான அறிக்கையை மே 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.