Railway | Reels | Police | ஓடும் ரயில் பக்கத்துல ரீல்ஸ்.. போலீசார் செய்த சம்பவம்
ரயில் நிலையத்தில் ரீல்ஸ்- பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு;
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் ஓடும் ரயில் அருகே ரீல்ஸ் எடுத்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிமுனையை சேர்ந்த பரத விஷால், நாகர்கோவில் சகாய ஜெனிஷா உள்ளிட்ட 5 பேர் தண்டவாளத்தில் ரயில் சென்றபோது ஆபத்தை உணராமல், ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.