டிராக்டர் மீது மோதி ஒருபக்கம் நொறுங்கிய கார் - பெண் கவுன்சிலர் பரிதாப பலி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் உடன்குடியைச் சேர்ந்த பெண் காங்கிரஸ் கவுன்சிலர் அன்பு ராணி என்பவர் பலியானார். விபத்தில் அவரது மகன் மற்றும் மருமகள் காயங்களுடன் உயிர்த்தப்பினர். விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கிய நிலையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.