தைலம்-கற்பூரம் குழைத்து சளி பிடித்த குழந்தைக்கு தேய்க்கலாமா? எச்சரிக்கும் டாக்டர்

Update: 2025-07-17 04:37 GMT

தைலம் - கற்பூரம் குழைத்து தேய்த்ததால் 8 மாத குழந்தை பலி?

சென்னையில அதிகமான சளி காரணமா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்த ஏற்படுத்தியிருக்கு. பிறந்து 8 மாதமே ஆன குழந்தைக்கு பெற்றோர் தைலம் மற்றும் கற்பூரத்த சேர்த்து தேய்த்ததா சொல்லப்படுது. இதுபோல பச்சிளம் குழந்தைகளுக்கு தைலத்தையு, கற்பூரத்தையு சேர்த்து தேய்ப்பது சரியா? கற்பூரத்த தேய்த்தா என்னவாகும்னு? விரிவா பார்க்கலாம்.

சென்னை அபிராமபுரத்துல அதிகமா சளியிருந்த 8 மாத குழந்தைக்கு பெற்றோர், 13 ஆம் தேதி மாலை தைலத்தையு, கற்பூரத்தையு சேர்த்து மூக்குல தேய்ச்சுருக்காங்க. தொடர்ச்சியா குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படவும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில அனுமதிச்சுருக்காங்க. காலைல குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துருக்கு.

சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீஸ், குழந்தை சளியால உயிரிழந்ததா? இல்ல சளிக்கு தைலத்தையு, கற்பூரத்தையு சேர்த்து மூக்குல தேய்த்ததால உயிரிழந்ததானு? உடற்கூராய்விலேயே தெரியவரும்னு சொல்லிருக்காங்க. இந்த சம்பவம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கு. இன்றைக்கு சமூக வலைதளங்கள்ல வரும் மருத்துவ குறிப்புகள பார்த்து எந்த விபரீத முயற்சியையு செய்யாதீங்க என்பது மருத்துவர்களோட தொடர் எச்சரிக்கையா இருக்கு. குழந்தைகளுக்கு சளி பிரச்சினை என்பது பொதுவான ஒன்னுனு சொல்லும் அவர்கள் மருத்துவர்கள் கிட்ட ஆலோசித்து, அவங்க பரிதுரை செய்யும் மருந்துகள மட்டும் எடுத்துக்கொள்ள சொல்றாங்க.

Tags:    

மேலும் செய்திகள்