திறந்த இரண்டே நாளில் சேதமான பஸ் ஸ்டாப் - உடனடியாக சீரமைத்த காண்ட்ராக்டர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதிதாக திறக்கப்பட்ட பயணியர் நிழற்குடையின் மேற்கூரை இரண்டே நாட்களில் சேதம் அடைந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் அதனை இரவோடு இரவாக சீரமைத்தனர். சீவூர் பஞ்சாயத்து உட்பட்ட சித்தூர்கேட் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்கூடம் 2 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இதனிடையே மேற்கூரையில் உள்ள சீலிங் சேதம் அடைந்த நிலையில் இரவோடு இரவாக அதனை ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.