Bus | Protest | நிற்காமல் சேற்றை அடித்து சென்ற பேருந்து.. துரத்தி வந்த பெண்ணிடம் கை ஓங்கிய ஓட்டுநர்!
- கையை ஓங்கிய அரசுப்பேருந்து ஓட்டுநர் - தர்ணா செய்த பெண்
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தன்னை அடிக்க கை ஓங்கிய அரசுப்பேருந்து ஓட்டுநரை கண்டித்து, அவர் ஓட்டி வந்த அரசுப்பேருந்தை மறித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
- கக்கன் ஜி நகரை சேர்ந்த பெண்ணான காளிமுத்து, சுக்காம்பட்டி விலக்கு அருகே அரசுப்பேருந்தை நிறுத்துமாறு சிக்னல் காட்டியுள்ளார். அரசுப்பேருந்து நிற்காமல் சேற்றை வாரி இறைத்து விட்டு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண், உறவினரின் டூவீலர் மூலம் பேருந்தை விரட்டி சென்று ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அரசுப்பேருந்து ஓட்டுநர் பெண்ணை அடிக்க கை ஓங்கினார். இந்நிலையில், அடுத்த நாள் பேருந்தை மறித்த அந்த பெண், அரசுப்பேருந்து ஓட்டுநர் மன்னிப்பு கேட்கும் வரை இடத்தை விட்டு நகரவில்லை.