கடற்கரையில் ஒதுங்கிய மூட்டைகள்.. பீதியில் குமரி மக்கள்.. நேரில் ஓடி வந்த மாவட்ட ஆட்சியர்

Update: 2025-05-29 02:22 GMT

கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் இருந்து பிளாஸ்டிக் ரசாயன மூட்டைகள் குமரி மாவட்ட கடற்கரை ஒதுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட லைபீரியா நாட்டைச் சேர்ந்த கப்பல் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கேரளாவின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில், கண்டெய்னரில் இருந்த பிளாஸ்டிக் ரசாயன பொருட்கள் மூட்டைமூட்டையாக குமரி மாவட்ட கடற்கரையில் ஒதுங்கியதால் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கரை ஒதுங்கிய மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்