பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி சாம்பள்ளி ஊரைச் சேர்ந்தவர் ரேவதி (38), இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் பூர்வீக சொத்து, மூன்று பங்காளிகளுக்கு உரியது. அதனை மற்ற இருவர் அதே ஊரைச் சேர்ந்த, அரசு- சாமிக்கண்ணு தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளனர். அனைவரும் ஒரே கிணற்றில் இருந்து நீர் பாசனம் செய்து வருகின்றனர்.
ரேவதி நில நீர் பாசனத்திற்கான பைப்லைன், அரசு- சாமிக்கண்ணு தரப்பினரின் நிலத்தின் வழியே செல்கிறது. இன்று அந்த வழியாக சென்ற பைப்லைன் உடைந்ததை தொடர்ந்து, அதனை ரேவதி சரி செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அரசு, தங்களது நிலத்தில் யாரை கேட்டு உள்ளே நுழைந்தாய் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். தொடர்ந்து அரசு, ரேவதியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ரேவதி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இது தொடர்பான புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்