கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை வாங்க சென்ற பட்டியலின பெண்ணை திட்டி தாக்கிய சம்பவம் குறித்து கேட்ட அவரது அண்ணண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கரைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் சாந்த ரூபி அகரக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்க சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் அந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி கீழே தள்ளி விட்டதாகவும், இதனை கேட்க சென்ற அவரது அண்ணன் அழகு பிள்ளையையும் அடித்ததாக கூறப்படுகிறது.இதில் மயக்கமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...