ஜார்க்கண்டில் திடீர் நிலச்சரிவு - பரபரப்பு
ஜார்கண்ட் மாநிலம் பாபன்பே மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாகின் சதார் பகுதியில் உள்ள பாபன்பே மலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை குழு எடுத்துள்ளது.