குறைந்த விலையில் பிராண்டடு டிரஸ் - போட்டி போட்டு குவிந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
குறைந்த விலையில் பிராண்டடு டிரஸ் - போட்டி போட்டு குவிந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக முன்னணி நிறுவனங்களின் ஆடைகளை குறைந்த விலைக்கு வழங்குவதாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் பல ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள், பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க குவிந்த நிலையில் சேதமடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஓட்டல் நிர்வாகி மற்றும் விற்பனை ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.