களேபரமான GBU கொண்டாட்டம்... AK ரசிகர்களை தாக்கிய பவுன்சர்கள் - அதிர்ச்சி காட்சி
விருதுநகரில் பிரபலமான அப்சரா, ராஜலட்சுமி திரையரங்குகளில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தைக் காண அஜித் ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.மேலும் பிரம்மாண்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ராஜலட்சுமி தியேட்டருக்குள் ரசிகர்கள் முண்டி அடித்துக் செல்ல முயன்றதால்,பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் பவுன்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு. பவுன்சர்கள் அஜித் ரசிகரை தாக்கும் காட்சிகள் வெளிவாகியுள்ளன.