தண்ணீருக்காக தோண்டப்பட்ட கிணறு.. எரிமலை போல அக்னி பிழம்பை அனுப்பிய பூமி
சத்தீஸ்கர் மாநிலம் சிக்கனி தரம்பூரில், விவசாயி ஒருவரின் நிலத்தில் ஆழ்துளை கிணற்றை தோண்டியுள்ளார். முதலில் தண்ணீர் வெளிவந்த நிலையில், பின்னர் நெருப்பு வெளி வந்தது. சுமார் 24 மணி நேரத்தை கடந்து விட்ட பிறகும் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளிவரும் நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ள நிலையில், நெருப்பை அணைக்க முடியாமல் விவசாயி திகைத்துப் போய் உள்ளார். நிலத்தில் இருந்து வெளிவரும் இயற்கை வாயுவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றிலிருந்து பற்றி எரியும் தீயை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.