Book Release | Chennai | Kavingnar Thiyaru | கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்கள் வெளியீடு

Update: 2025-08-10 07:24 GMT

Book Release | Chennai | Kavingnar Thiyaru | கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்கள் வெளியீடு

கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்கள் வெளியீடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் கவிஞர் தியாரூ எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில், 'என் வலையில் விண்மீன்கள்', வைகறையில் மலர்ந்த வைர பூக்கள், ஒரு வழிப்போக்கனின் பார்வை, மற்றும் வல்லமை தாராயோ ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவிற்கு பெஸ்ட் மணி கோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் பி.எல்.ஏ ஜெகன்நாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்த விழாவில் தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் எல்லோரா மணி, திமுக இளைஞரணி செயலாளர் ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்