மேலே கொதிக்க கொதிக்க எண்ணெய்.. 43 நாள் உயிருக்கு போராடிய குழந்தை.. டாக்டர்களால் வந்த உயிர்

Update: 2025-07-11 05:49 GMT

சேலத்தில் தீக்காயத்தால் உயிரை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்த குழந்தையின் உயிரை,43 நாள் போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் காப்பற்றியுள்ளனர். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கு மூன்று வயதான ப்ளெஷ்வின் என்ற மகன் உள்ளார்.கீர்த்தனா வீட்டில் சமைத்து கொண்டிருந்தார்.அப்போது விளையாடி கொண்டிருந்த குழந்தை தடுமாறி கீழே விழுந்ததில்,அவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. 50 சதவீதம் தீக்காயத்தால் முகம் முழுவதும் வீக்கம் ஏற்பட்ட நிலையில்,தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் 43 நாட்கள் உயிருக்கு போராடிய குழந்தையை தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பற்றியுள்ளனர். குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்