கண்ணில் தெறித்து ஓடிய ரத்தம் - கடவுளாக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்

Update: 2025-05-04 02:27 GMT

கூடலூரில் கண்ணில் அடிபட்ட சிறுவனை மேல்சிகிச்சைக்காக 3 மணி நேரத்தில் கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது 11 வயது மகன் நவநீதன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கண்ணீல் மரக்கட்டை குத்தி காயம் ஏற்பட்டது. இதற்கான மேல்சிகிச்சைக்காக கோவைக்கு 4 மணி நேரத்தில் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கூடலூரில் இருந்து கோவைக்கு செல்ல 6 மணி நேரம் ஆகும். இந்த நிலையில், அவசரத்தை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், கூடலூர் மலை பாதையில் இருந்து, 140 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து, கோவை மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்