உத்தரப்பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடர்ந்து உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோரக்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இறந்த புலிக்கு பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட இடங்களில் ஒருவார காலத்திற்கு உயிரியல் பூங்காக்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான லயன் சஃபாரியும் Lion Safari நிறுத்தப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள் மட்டுமின்றி, கோழிப்பண்ணைகளிலும் பறவைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.