சென்னை பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த பீகாரை சேர்ந்த மாணவி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். பீகாரை சேர்ந்த தனஞ்சே திவாரி என்பவர், பல்லாவரத்தில் வெல்டிங் வேலை செய்து வரும் நிலையில், அவரது மகள் ஜியா குமாரி பல்லாவரம் கவுல் பஜார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். த
ற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜியா குமாரி 467 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குறிப்பாக தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து, கேக் வெட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்..
இது குறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்த மாணவி, முதலில் தமிழ் கடினமாக இருந்ததாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் தமிழை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மருத்துவராக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்