விமர்சையாக நடைபெற்ற பவானி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பவானி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை ஊற்றி, வேதமந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கும்ப மரியாதையோடு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.