பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸ்-ன் 45 வது கிளை திறப்பு
திருச்சியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸின் 45 வது கிளை துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. பிரபல மின்சாதன பொருட்கள் விற்பனையகமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்சஸுடைய, தமிழகத்தின் 45 வது கிளையும், திருச்சியின் 4வது கிளையின் திறப்பு விழா, திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. புதிய ஷோரூமை மேனேஜிங் பார்ட்னர் ராஜா ரவிச்சந்திரன், பார்ட்னர்கள் அருள்குமார் மற்றும் அருண்கார்த்திக், ஹர்ஷிதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முன்னணி பிராண்டுகளின் TV, FRIDGE, WASHING MACHINE, AC மற்றும் MOBILE ஃபோன்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை கேட்டு, சலுகை விலையில் வாங்கும் வகையில் உள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸின் அனைத்து கிளைகளிலும் நடக்கும் தீபாவளி சிறப்பு விற்பனையில், சுலப மாத தவணை வசதியில் பொருள் வாங்கி பயன்டையுமாறு நிர்வாகத்தினர் கெட்டுக்கொண்டுள்ளனர்.