பீச் கிரிக்கெட் - திக்..திக்... இறுதி ஓவர்.. முட்டுக்காடு டீம் திகில் வெற்றி

Update: 2025-05-23 01:47 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சியில், நடைபெற்று வரும் பீச் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சுற்றில் முட்டுக்காடு அணி வெற்றி பெற்றது. கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனாதங்கம் சுந்தர் ஏற்பட்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில், இதுவரை 200க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 274 அணிகள் கலந்து கொண்ட தொடரில், இரண்டாம் சுற்று ஆட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாவது சுற்றில் திருக்கழுக்குன்றம் அணியும், முட்டுக்காடு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருக்கழுக்குன்றம் அணி 5 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்த‌து. பின்னர் ஆடிய முட்டுக்காடு அணி 4 ஓவர் இரண்டு பந்துகளில், 70 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்