சென்னை அருகே, வீட்டு வேலை கேட்டுச் சென்று, இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மூதாட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேர் டெனிட் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஷிவானி. இவர் வீட்டிற்கு வந்த மூதாட்டி ஒருவர், ஏதாவது வேலை இருக்குமா என கேட்டு பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தை நோட்டமிட்டு, ஷிவானி முகத்தில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தார். ஷிவானி சத்தமிட்ட நிலையில்,அங்கிருந்தவர்கள், மூதாட்டியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.