ஊட்டியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்... கையோடு பிடித்து அதிரடி காட்டிய அதிகாரிகள் || OOTY Raid

Update: 2025-04-13 11:08 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து, வருவாய் துறையினர் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் உள்ளது. இந்நிலையில் விடுமுறை நாளையொட்டி ஃபன் சிட்டி (fun city ) பகுதியில் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் இருந்து ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் ப்ளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்