2 லட்சம் வளையல்கள் வைத்து அங்காளம்மனுக்கு வளைகாப்பு - திரண்டு வந்த பக்தர்கள்

Update: 2025-07-29 03:19 GMT

2 லட்சம் வளையல்களை கொண்டு அங்காளம்மனுக்கு வளைகாப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, இரண்டு லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அப்போது அங்கு நடைபெற்ற சுமங்கலி பூஜை, மாங்கல்ய பூஜை மற்றும் மகாதீபாரதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்