``மீண்டும் பள்ளிக்கு போகலாம்'' - 45 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 45 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில், ஆசிரியையின் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
கடந்த 1980 மற்றும் 1981ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி, 45 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்றது. இதில், சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தங்களது, பேரன் பேத்திகளுடன் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியை ஒருவரின் பிறந்த நாளை, அப்போது கேக் வெட்டிக் கொண்டாடியதோடு, தங்களின் பள்ளி பருவ நாட்களை மகிழ்ச்சி உடன் நினைவு கூர்ந்தனர்.