கோவையில்`தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை' சார்பில் விழிப்புணர்வு பேரணி

Update: 2025-11-14 11:37 GMT

நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, தி ஐ ஃபவுண்டேஷன் ஹாஸ்பிட்டல் மருத்துவர் சிஸ்டிரி sistri தெரிவித்துள்ளார். உலக நீரிழிவு நோய் தினத்தை ஒட்டி, கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் இயங்கி வரும் "தி ஐ ஃபவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர காவல் துணை ஆணையர் அசோக்குமார் மற்றும் மருத்துவமனை மருத்துவர் தென்னரசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி ஐ ஃபவுண்டேஷன் ஹாஸ்பிட்டல் மருத்துவர் சிஸ்டிரி, நீரிழிவு நோயால் கண் பாதிக்கப்பட்டால் கண்ணில் ரத்தக் கசிவு, நரம்புகளில் வீக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும், எனவே உடனடியாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்