Auto Viral Video | சாலையில் பின்னோக்கி ஓடிய ஆட்டோ - ஆச்சரியத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்..
சத்தியமங்கலத்தில், விபத்துக்குள்ளான லோடு ஆட்டோ அதிவேகத்தில் பின்னோக்கி சென்ற காட்சிகள் வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அந்த ஆட்டோவை மற்றொரு சரக்கு வாகனத்தில் ஏற்றி பட்டரைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த காட்சிகளை பின்னிருந்து பார்த்த வாகன ஓட்டிகள் லோடு ஆட்டோ ஒன்று ரிவைஸ் கியரில் அதிவேகத்தில் செல்லவதாக எண்ணி ஆச்சிரியமடைந்தர். அந்த வழியாக காரில் சென்ற வாகன ஓட்டிகள் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.