"அதிமுக கல்வெட்டை அகற்ற முயற்சி" - ஆட்சியரிடம் புகார் மனு அளித்த எஸ்.எம்.சுகுமார்

Update: 2025-07-21 14:06 GMT

அதிமுக கல்வெட்டை அகற்ற முயற்சி - எஸ்.எம்.சுகுமார் புகார் மனு

ராணிபேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கல்வெட்டை அகற்றி விட்டு, திமுக கல்வெட்டை வைக்க முயல்வதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள எஸ்.எம்.சுகுமார், ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆட்சியரிடம் பேசியுள்ளார். மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்