கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

Update: 2025-07-03 05:18 GMT

திருப்பத்தூர் அருகே கவுன்சிலரின் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் புதிய நியாயவிலை கடை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கவுன்சிலர் பார்வையிட சென்றபோது , அதே பகுதியை சேர்ந்த 3 பேர், தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட சுகுணாவின் கணவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த அவர், சிசிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்