`அதிர்ந்த அரோகரா முழக்கம்' | முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா
கிருத்திகை தினம் - முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். முன்னதாக அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராக வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அரோகரா முழக்கங்களை எழுப்பியபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.