திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, 76 யாகக் குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஒளிரும் யாகசாலை, முருகனின் அறுபடை வீடுகள் வரைபடம் ஆகிய அலங்கார அமைப்புகள் பக்தர்களை கவர்கின்றன.