ஸ்ரீரங்கம் கோயிலில் வஸ்திர மரியாதை நிகழ்வு-மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள்

Update: 2025-07-27 02:43 GMT

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வஸ்திர மரியாதை நிகழ்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடந்த வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆண்டாளுக்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்றது. ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் வழங்கப்படும் மங்கள பொருட்களை கோவில் அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர். இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்