Arrest | கேவலம் செய்துவிட்டு சீனாவில் இருந்து வந்த கோபால் - தரையிறங்கியதும் தூக்கிய சென்னை போலீஸ்
சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வெளிநாட்டில் இருந்து மும்பை திரும்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் அடையாறில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் கோபால் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டது தெரிய வந்தது. 11 மாதங்களுக்கு பிறகு சீனாவில் இருந்து மும்பை திரும்பிய கோபாலை குடியுரிமை அதிகாரிகள் லுக்அவுட் நோட்டீஸ் முறையில் பிடித்து வைத்தனர். இதன் பின்னர் மும்பை விரைந்த சென்னை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.