Armstrong Case | முடிந்தது போஸ்ட்மார்ட்டம் - ஒப்படைக்கப்படும் ரவுடி நாகேந்திரன் உடல்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி, ரவுடி நாகேந்திரனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகேந்திரனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இது குறித்து மாஜிஸ்திரேட் தீபா, நாகேந்திரன் மகன்களிடம் விசாரணை நடத்தினார். இன்று காலை நாகேந்திரனின் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.