Antibiotic "மாத்திரை வாங்கும் போது மிக கவனம் - இப்படி இருந்தால் அதை சாப்பிடாதீங்க" - சுகாதாரத்துறை
"மாத்திரை வாங்கும் போது மிக கவனம் - இப்படி இருந்தால் அதை சாப்பிடாதீங்க" - சுகாதாரத்துறை அறிவிப்பு
சிவப்புக் கோடு பட்டை குறிப்பிடாமல் உள்ள எந்த ஒரு ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்க வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
போலி இருமல் மருந்து விற்பனை மோசடிக்கு பிறகு ஆண்டிபயாட்டிக் மருந்து விற்பனையில் சில அதிரடி நடவடிக்கையை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
அதன்படி ஆண்டிபயாடிக் மாத்திரையின் அட்டையில் பின்புறத்தில் சிவப்பு கோடு பட்டை இருந்தால் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
ஆண்டிபயாடிக் மாத்திரைகளில் சிவப்புக் கோடு பட்டை இல்லாமல் எந்த ஒரு மாத்திரைகளும் மருந்தகங்களில் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவப்புக் கோடு பட்டை இல்லாமல் விற்பனை செய்தால் மருந்தகங்களில் ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய க்யூ.ஆர் ஸ்கேன் மூலம் புகார்கள் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.