சென்னையில் அடுத்த அதிர்ச்சி - கொக்கைன் விற்பனை செய்த நைஜீரியா நாட்டு பெண் கைது
கொக்கைன் விற்பனை - நைஜீரியா நாட்டு பெண் கைது
சென்னையில் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் கொக்கைன் விற்பனை தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் விசாராணை மேற்கொண்டு வரும் நிலையில் இது வரை நைஜீரியா இளைஞர் உட்பட 24 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் நைஜீரியா நாட்டை சேர்நத சாரா குமானா Sarah Kumama என்கிற பெண்ணை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நடிகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்து கைதாகி உள்ள பிரதீப்பையும் இந்த வழக்கில் சூளைமேடு போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.