கும்மிண்டிப்பூண்டி போல மயிலாப்பூரில் அடுத்த பேரதிர்ச்சி-வடமாநில நபர் செய்த குரூரம்
முதியோர் பராமரிப்பு மையத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
சென்னை மயிலாப்பூர் பகுதியில் முதியோர் பராமரிப்பு மையத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வெளிமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் முதியோர்கள் பராமரிப்பு மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக Cardiac Care பயிற்சியில் உள்ளார். இந்த நிலையில், அவரிடம் வார்டு பாயாக வேலை செய்து வரும் ரைசன் மராண்டி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரைசன்மராண்டி என்ற அந்த நபரை கைது செய்துள்ளனர்.