சிசிடிவியை மீறி நடந்த சம்பவம்.. ஊர் திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் சிசிடிவி பாதுகாப்பை மீறி, வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, 3 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அழகு மீனா என்பவர், 4 நாட்களுக்கு முன் வெளியூரில் உள்ள தனது தாயாரை பார்க்க சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது. அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு கிடந்தது. அதை சேகரித்து, கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.