கத்திமுனையில் அரங்கேறிய சம்பவம் | நள்ளிரவில் அலறிய வயதான தம்பதி

Update: 2025-09-11 10:42 GMT

கத்தியை காட்டி மிரட்டி வயதான தம்பதியிடம் நகை, பணம் கொள்ளை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காட்டுவளவு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், தனது மனைவியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். நள்ளிரவில் இவர்களது வீட்டு கதவை தட்டி உள்ளே புகுந்த 2 பேர், ராஜகோபாலையும் அவரது மனைவியையும் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, 19 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். தகவலின் பேரின் வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்