Ambulance | ``8 நிமிடத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் சேவை'' - சுகாதாரத்துறை சொன்ன தகவல்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 8 நிமிடங்களுக்குள் 108 ஆம்புலன்ஸ் சேவை விரைந்து செல்வதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல், மெட்ரோ மற்றும் கட்டுமான பணிகள் காரணமாக சில இடங்களில் சேவை தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள், அடர்த்தி மிக்க குடியிருப்பு மற்றும் குடிசை பகுதிகள் ஹாட்ஸ்பாட்டுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 5 நிமிடத்திற்குள்ளும், செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடத்திற்குள்ளும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர்வதாக சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.